OPS vs EPS :அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது...!புதிய பொதுக்குழு தேதி செல்லாது..?வைத்தியலிங்கம் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jun 23, 2022, 1:01 PM IST
Highlights


அதிமுக அழிவுப்பாதையில் செல்வதாக பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 

பொதுக்குழுவில் கூச்சல்-குழப்பம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிர்வாகிகள் உரிய முறையில் மரியாதை வழங்கவில்லை. மேடையிலேயே அவமானப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஒருங்கிணைப்பாளரை அழைக்காமல் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னதாக சென்று மலர் தூவி விட்டு வந்தார். இதனையடுத்து ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார். இதே கருத்தை கே.பி.முனுசாமியும் கூறினார். தொடர்ந்து அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் பதவியேற்றார். கட்சியின் உயர் பதிவியில் ஒருவர் நியமிக்கப்படுவதில் ஓபிஎஸ் கருத்து கூட கேட்காமல் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் அறிவித்தனர். இதனையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அழிவுப்பாதையில் அதிமுக

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் கட்சியில் நடவடிக்கையில் தீவிரம் காட்ட முடியவில்லையென தெரிவித்தார். மேலும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றை தலைமை தான் தேவை என கூறி அதற்கான ஒப்புதல் கடித்ததை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கினார். இந்த நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒற்றை தலைமை தொடர்பாக முடிவு செய்ய ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் தரப்பினர் மேடையில் இருந்து புறப்பட்டனர். அப்போது இந்தபொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி விமர்சித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம், அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சால் பரபரப்பு..!

 

click me!