உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது என்ற தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தனர்.
பொதுக்குழுவை புறக்கணித்து விட்டு வெளியே சென்ற போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது என்ற தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தனர். இதனையடுத்து, ஒருமனதாக நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேனிடம் அதிமுகவின் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் அறிவிக்க வேண்டும் என அவைத் தலைவருக்கு சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட பிறகு அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இதனையடுத்து, இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் தீர்மான நகல்களை அவர் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.