இதுக்கு முடிவே கிடையாதா..? முடியல சாமி.. ராஜேந்திர பாலாஜியை ரவுண்ட் கட்டும் வழக்குகள் !!

By Raghupati RFirst Published Feb 13, 2022, 12:38 PM IST
Highlights

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம்  விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 11 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு தொரடப்பட்டது. இதனையடுத்து தலைமைறவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதையடுத்து கடந்த மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

இருப்பினும் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறிய புகாரில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.  அதன்படி கடந்த 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வந்தார். 

இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததால், தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர். சான்றிதழ் இல்லாததால் அவர் மாவட்ட குற்ற பிரிவு அலுவலகம் முன்பு காரிலேயே காத்திருந்தார்.  இதை தொடர்ந்து நெகட்டிவ் சான்றிதழ் வாங்கி விட்டு மீண்டும் ஆஜராவதாக கூறி அங்கிருந்து  சென்றுவிட்டார்.

இந்தநிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி நேரில் ஆஜரானார். அவரிடம்  சுமார் 10  மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும் அவரிடம் மோசடி வழக்கு தொடர்பான  100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர் பதில் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

click me!