ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ, இபிஎஸ்க்கு ஆதரவு ...? ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செக் வைக்கும் கே.பி.முனுசாமி

By Ajmal Khan  |  First Published Sep 1, 2022, 8:59 AM IST

அதிமுக மற்றும் மக்கள் மத்தியில் எந்த விதத்திலும் செல்வாக்கு இல்லாத தலைவர் ஓபிஎஸ் என விமர்சித்துள்ள கே.பி.முனுசாமி,  அதிமுகவைப் பற்றி பேச புகழேந்திக்கு தகுதி இல்லையென கூறியுள்ளார்.
 


மேடை பேச்சாளர் ஓபிஎஸ்

வேலூர் புறநகர் மாவட்ட துணைசெயலாளர் மூர்த்தி கற்பகம் இல்ல நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவராலும்  இணைந்து  கட்சியை விட்டு நீக்க பட்டவர் தான் புகழேந்தி அவர் இப்போது எந்த கட்சியில்  உள்ளார். தற்போது ஓபிஎஸ் அருகாமையில் இருந்து கொண்டு அதிமுகவை விமர்சித்து வருகிறார் புகழேந்திக்கு அதிமுகவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லையென கூறினார்.  நானும் பதவியை ராஜினாமா செய்கிறேன். இபிஎஸ்யும் பதவியை ராஜினாமா செய்து விட்டு வாங்கள் ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம் என்று ஓபிஎஸ் பேசி இருக்கிறார் இது கட்சியின் தலைமையில் இருந்தவர் பேசுவது போல் இல்லாமல் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர்  மேடையில் பேசுவது போல் இருக்கிறது. கட்சி ஒரு தனிநபருக்கும் ஒரு குடும்ப கட்டுப்பாட்டுக்குள் கட்சி சென்று விடக்கூடாது என்று அன்று கூறி தான் தர்ம யுத்தம் நடத்தினீர்கள் நானும் உங்களுடன் இருந்தேன்  கட்சியில் சசிகலாவை சேர்க்கக்கூடாது என்று சொன்னவர் இன்று அவருடன் பேசுவேன் அவர்களை சேர்த்துக் கொள்வேன் என்று ஏன் சொல்கிறார். 

Tap to resize

Latest Videos

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ நிலை என்ன..?

 எந்தவிதமான செல்வாக்கும் இல்லாதவர் ஓபிஎஸ், இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு மாற்றான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதனாலதான் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் கூட மறைமுகமாக பல்வேறு வகையில் ஓபிஎஸ் க்கு உறுதுணையாக இருக்கிறார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள எடப்பாடி அரசியலில் உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒருசாராராக உள்ளனர். 30, 40, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்று ஆளுங்கட்சியினர் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரங்கள் செய்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஓபிஎஸ் உடன் இருக்கும் சில எம்எல்ஏக்கள் கூட இபிஎஸ் பக்கம் வர வாய்ப்புள்ளது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடிக்கு ஆதரவாக தான் உள்ளனர் என தெரிவித்தார். 

தேர்தல வாக்குறுதி கொடுத்தீங்க.. 15 மாசம் ஆயிடுச்சி என்ன பண்ணீங்க..? முதல்வரை விளாசும் ஓபிஎஸ்

வாழ்த்து தெரிவிக்காதது ஏன்..? 

கிறிஸ்மஸ், ரம்ஜான் பண்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இரட்டை வேடம் போட்டு வருகிறார் என குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்
ஶ்ரீமதி மரணம் தற்கொலையா..? நீதிமன்றம் எதனடிப்படையில் முடிவுக்கு வந்தது..? சீமான் கேள்வி

click me!