கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது, வாக்குச்சாவடிக்குள் அத்துமீறியதாக கூறி திமுக நபரை சட்டையைக் கழற்ற வைத்து அரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
தன்னை கைது செய்த போது அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய உள்துறை செயலாளருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது, வாக்குச்சாவடிக்குள் அத்துமீறியதாக கூறி திமுக நபரை சட்டையைக் கழற்ற வைத்து அரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின் ஜானிமில் விடுவிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்ட சி.வி. சண்முகம் உடல்நிலை எப்படி உள்ளது? வெளியான தகவல்..!
அதை தொடர்ந்து, பொய் வழக்கில் தன்னை கைது செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளருக்கு ஜெயக்குமார் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மாநில காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு உத்தரவிட்டு 13 மாதங்கள் ஆன பிறகும், டிஜிபியிடம் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது, செயலற்ற தன்மையை காட்டுகிறது.
இதையும் படிங்க;- பிரதமர் கனவோடு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்! இதெல்லாம் ஏற்கவே முடியாது! இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!
எனவே மத்திய அரசு தனது கடிதங்கள் மூலம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசு செயல்படுத்தாததாலும், அதற்கு கீழ்ப்படியாததாலும், மத்திய உள்துறை அமைச்சகம், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.