அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் திண்டிவனத்திலிருந்து சென்னை வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீரானதையடுத்து வீடு திரும்பினார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான நேற்று முன்தினம் திண்டிவனத்திலிருந்து சென்னை வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க;- பிரதமர் கனவோடு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்! இதெல்லாம் ஏற்கவே முடியாது! இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!
மேலும், அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அவரது உடல்நிலை சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு வீடு திரும்பினார்.
இதையும் படிங்க;- திருப்பூரில் பயங்கரம்! 50க்கும் மேற்பட்ட துணிக்கடையில் தீ விபத்து! 8 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.!