ஏழை குழந்தைனா அலட்சியமா? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இதுதான்! இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்!

By vinoth kumar  |  First Published Jul 5, 2023, 6:39 AM IST

காவேரி மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை விழிப்போடு கண்காணிக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். முதலமைச்சரும், அமைச்சர்களும் அவரை பார்க்கப்வோவார்கள். ஆனால்,  அரசு மருத்துவமனையை நம்பி வந்த ஓர் ஏழை குழந்தையை அலட்சியமாக நடத்துகிறார்கள். 


குழந்தையை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு தலையில் நீர் கோர்த்த பிரச்சினை காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது குழந்தையை அனுமதித்துள்ளார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து அக்குழந்தையின் கை மேலும் அழுகியதால், குழந்தையின் கை அகற்றப்பட்டது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை கண்டு பாஜகவுக்கு பயமா? பங்கம் செய்யும் வானதி சீனிவாசன்

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆறுதல் கூறினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;-  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தைக்கு கை அகற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு கிடையாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஒரு குழந்தையின் கை பறிபோகியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். 

காவேரி மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை விழிப்போடு கண்காணிக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். முதலமைச்சரும், அமைச்சர்களும் அவரை பார்க்கப்வோவார்கள். ஆனால்,  அரசு மருத்துவமனையை நம்பி வந்த ஓர் ஏழை குழந்தையை அலட்சியமாக நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இதுதான். சளிக்கு வந்தவர்களுக்கு நாய்க்கடி ஊசி போடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை நாட்டிலேயே முதன்மையான இடத்தில் இருந்தது. அதிமுக ஆட்சியில் தமிழகம் மருத்துவத்தில் சிறந்து விளங்கியது. ஆனால், திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியில் மருத்துவத்துறை மிக மோசமாக உள்ளது. 

இதையும் படிங்க;-  குழந்தை விவகாரம்: இதனால்தான் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? விஜயகாந்த் கேள்வி !!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கடந்த நவம்பர் மாதம் இளம் கால்பந்து வீராங்கனையின் உயிர் பறிபோனது. இதேபோல் தலைமை காவலர் ஒருவரின் பெண் குழந்தைக்கு தவறான சிகிச்சையால் கால் பறிபோனது. மகளுக்கு தவறான சிகிச்சை செய்ததை கண்டித்து தலைமைக் காவலரே தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தினார். குழந்தையை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. குழந்தையின் எதிர்காலம் கருதி திமுக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

click me!