பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தலைமறைவா.? ஜாமின் நிபந்தனை மனு தள்ளுபடி -அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

By Ajmal Khan  |  First Published Jul 4, 2023, 2:25 PM IST

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பியதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் தேடி வரும் நிலையில், ஏற்கனவே நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனையை தளர்த்த கோரி தொடரப்பட்ட வழக்கில் எஸ்.ஜி.சூர்யாவின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


அவதூறு கருத்து- எஸ் ஜி சூர்யா கைது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நண்பராக இருப்பவர் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இவர் தனது சமூக வலைதளத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். மேலும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவும் கூறியிருந்தார்.  இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார், சென்னையில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

இதனையடுத்து ஜாமின் கோரி எஸ்.ஜி. சூர்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது, மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டும் படி நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் எஸ்.ஜி.சூர்யாவை தேடி வரும் நிலையில், . சமீபத்தில் அவர் டெல்லிக்கு சென்று அங்கே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தீட்சிதர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. . மேலும் சிதரம்பரம் கோயில் தீட்சிதர் பூணுலை காவல்துறையினர் அறுத்ததாக சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

நிபந்தை ஜாமின் தளர்வு மனு- தள்ளுபடி

இந்த பதிவு  தொடர்பாக எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரணை நடத்த சிதம்பரம் போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி  எஸ்.ஜி சூர்யா தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. எனவே ஜாமின் நிபந்தனையை மீறியதாக எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை.! முதலமைச்சரையே தமிழகத்திற்குள் விட மாட்டேன் என சொல்வதா.? கேஎஸ் அழகிரி

click me!