தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது.. திமுகவை விமர்சிக்கும் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Sep 6, 2021, 3:48 PM IST
Highlights

தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் . பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் கூறியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,  தமிழக மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் . பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்துவதற்கு பதிலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். வாக்குப்பதிவு நடக்கும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். மேலும்,  தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது என்று திமுகசை மறைமுகமாக ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். 

click me!