ஏசி ரூமில் உட்கார்ந்து, இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் ஸ்டாலின்... அண்ணாமலை அதிரடி விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 6, 2021, 3:23 PM IST
Highlights

பெரியாருக்கு முன்பே சமூகநீதிக்காக பாடுபட்ட வஉசி, பாரதியார் பெயர்களை இருட்டடிப்பு செய்யக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 

பெரியாருக்கு முன்பே சமூகநீதிக்காக பாடுபட்ட வஉசி, பாரதியார் பெயர்களை இருட்டடிப்பு செய்யக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘’நீட் தேர்வு என்பது திமுக குடும்பத்திற்கு மட்டுமே எதிரானது" ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம். தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி சிலை அமைக்க, அனுமதி தர இன்னும் காலம் இருக்கிறது.  திமுகவின் கடைசி ஆட்சி காலம். இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை. 

ஏசி ரூமில் உட்கார்ந்து, இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறார் ஸ்டாலின். கச்சத்தீவை தாரை வார்த்தவர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி பேச அருகதை இல்லை. பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை சிக்க வைக்க தனி மனித தாக்குதல் நடக்கிறது என்பதுதான் எங்களது கருத்து. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் தலைவர்களை வழக்கில் சேர்ப்பதை பாஜக கண்டிக்கிறது. பட்டாசுத் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். கரோனாவை காரணம் காட்டி மட்டுமே பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுபோன்ற முடிவை மேற்கொள்ளாது'’ என்றார்.

click me!