நீங்கள் அரசியல் செய்ய கடவுள்தான் உங்களுக்கு கிடைத்தாரா? அண்ணாமலையை அலறவிடும் அமைச்சர் சேகர்பாபு.!

Published : Sep 06, 2021, 03:11 PM IST
நீங்கள் அரசியல் செய்ய கடவுள்தான் உங்களுக்கு கிடைத்தாரா? அண்ணாமலையை அலறவிடும் அமைச்சர் சேகர்பாபு.!

சுருக்கம்

மற்ற மாநிலங்களைப் போல மோசமான நிலைக்கு தமிழகமும் தள்ளப்பட நேரிடும். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். நாம் வீட்டில் இருந்தபடியே விநாயகரை வழிபட வேண்டும். அப்படி செய்தால் விநாயகர் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது என அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு இந்து அறநிலைத் துறை மானியக் கோரிக்கையில் சிறப்பாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது என்றார். அரசியல் நடத்த அரசியல் கட்சிகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால், கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் அவரை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது என எச்சரித்தார். பக்கத்து மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ளது. ஆனால் விழாக்கள் மூலம் மக்கள் அதிகமாக கூட அனுமதிப்பதன் மூலம் தொற்று அதிகரிக்க நேரிடும். 

மற்ற மாநிலங்களைப் போல மோசமான நிலைக்கு தமிழகமும் தள்ளப்பட நேரிடும். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். நாம் வீட்டில் இருந்தபடியே விநாயகரை வழிபட வேண்டும். அப்படி செய்தால் விநாயகர் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?