சிறைக்குள் இருந்தே ரூ200 கோடி மோசடி... சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகளுடன் காதலியும் கைது..!

Published : Sep 06, 2021, 02:07 PM IST
சிறைக்குள் இருந்தே ரூ200 கோடி மோசடி... சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளிகளுடன் காதலியும் கைது..!

சுருக்கம்

மரியா பால் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகேஷின் கூட்டாளிகள் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.   

மரியா பால் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகேஷின் கூட்டாளிகள் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

பிரபல மருந்து நிறுவனமான ரான்பாக்ஸி முன்னாள் அதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷின் காதலியும், பிரபல மலையாள நடிகையுமான லீனா மரியா பாலை நேற்று டெல்லி போலீஸ் கைது செய்தது.

 
 
லீனா மரியா பாலிடம் டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மரியாபால் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சுகேஷின் கூட்டாளிகள் 4 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ். லீனா மரியா பாலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருந்தபடி சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றியது அண்மையில் அம்பலமானது. இரட்டை இலை சின்னம் பெற்று ஹருவதாக டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி ஏமாற்றிய புகாரில் சிறையில் உள்ளார் சுகேஷ். சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள சுகேஷின் சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.   

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!