அதே நாள்.. பாமக கோரிக்கை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Sep 6, 2021, 1:27 PM IST
Highlights

1987-ம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காகப் போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பெரியாரின் பிறந்த நாள் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

1987-ம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் சமூக நீதி கேட்டு ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். அந்த நாளில்தான் சமூக நீதிக்காகப் போராடிய மாவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் வாக்குறுதி அளித்து வந்தது. பாமக சமூக நீதி நாள் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி!" எனப் பதிவிட்டுள்ளார்.

click me!