அமைச்சர் உதயநிதி தனது தாத்தா நினைவிடத்திற்கு சென்று ஏன் தாத்தா நீங்கள் 2007-2013 காலகட்டம் வரை நம் கட்சிக்காரர்கள் மத்தியில் அமைச்சர்களாக இருந்தும் தமிழகத்திற்கு வர வேண்டிய 13 ஆயிரம் கோடியை வாங்கித்தரவில்லை என்று கேட்க வேண்டும்.
கனமழைக்கு முன்பாக தமிழக அரசு உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என ஏற்கனவே நாங்கள் கூறிய கருத்தைதான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தற்போது கூறியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் அமைச்சரகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ;- திமுகவினர் உலகப் புகழ்பெற்ற பொய்யர்கள். இலவச மின்சாரத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்தான் கருணாநிதி கிடையாது. திரைப்படத்தில் பல நல்ல கருத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர். இன்று வரும் பாடல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை. ஆனால் எம்ஜிஆரின் தத்துவப் பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. சமூகம் எக்கேடு கெட்டால் என்ன என்று இன்றைய நடிகர்கள் இருக்கின்றனர்.
undefined
இதையும் படிங்க;- தென் மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் இழப்பீடு போதாது..15 ஆயிரம் ரூபாய் வழங்கிடுக- எடப்பாடி
மழைநீர் வடிகால் பணிக்காக 4000 கோடி செலவு செய்தது குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவிக்கின்றனர். எனவே அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதன் மூலம் எவ்வளவு செலவாகியுள்ளது. எதற்கெல்லாம் செலவானது என மக்களுக்கு தெரியவரும். ஆனால் அதை வெளியிட அரசு பயப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஏரி, குளங்களை முறையாக தூர்வாரி இருந்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்காது. நாங்கள் சொன்ன கருத்தைதான் நிர்மலா சீதாராமனும் சொல்லி இருக்கிறார்.
அரசியலில் நேற்று முளைத்த காளாண் உதயநிதி அவருக்கு வாய்த்துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடி பேச கூடாது. அமைச்சர்கள் பொறுப்பாக பேச வேண்டும் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவின் தாக்கம் பழவேற்காடு முதல் மரக்காணம் வரை பரவியுள்ளது. கச்சா எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதுமானது அல்ல. மீனவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். பல கோடி லாபத்தில் இயங்கும் சிபிசிஎல் லிடம் நிவாரணம் பெற்றுக் கொடுக்கலாமே. அவர்களிடம் 300 கோடி வாங்கி அதை மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாங்கள் எங்கள் ஆட்சியில் கடலில் எண்ணெய் கலந்தபோது அந்த கப்பல் நிறுவனத்திடம் நிதியை வாங்கு மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். படகுகளுக்கு 2 லட்சம் , வலைகளுக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி தனது தாத்தா நினைவிடத்திற்கு சென்று ஏன் தாத்தா நீங்கள் 2007-2013 காலகட்டம் வரை நம் கட்சிக்காரர்கள் மத்தியில் அமைச்சர்களாக இருந்தும் தமிழகத்திற்கு வர வேண்டிய 13 ஆயிரம் கோடியை வாங்கித்தரவில்லை என்று கேட்க வேண்டும். தனது தந்தையிடமும் கேட்க வேண்டும்.
இதையும் படிங்க;- PM Modi Tamilnadu Visit: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!
அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதியுடன் சுற்றுவதுடன் சரி, மாறி மாறி அந்த துறையில் சுற்றறிக்கை வெளியிடுகிறார்கள். ஒருநாள் சொன்னதை மறுநாள் மாற்றி புதிய உத்தரவு போடுகின்றனர். தற்போதைய முட்டாள் அரசில் உள்ள முட்டாள் துறை பள்ளிக்கல்வித்துறைதான் என ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.