வெள்ள பாதிப்பிற்காக தமிழகத்திற்கு 860 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, தேசிய பேரிடர் என்ற பெயரை பயன்படுத்த சட்டவிதி கிடையாது எனவும் கூறியுள்ளார்.
தென் மாவட்ட வெள்ளை பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,சென்னை மற்றும் தென் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மத்திய அரசின் குழு 20-ம் தேதி வந்து ஆய்வு செய்துவிட்டது.அதன் பின் தான் தமிழக முதல்வர் 21-ம் தேதி ஆய்வு செய்தார். தமிழகம் முதல்வருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. நிவாரணம் பணியில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசே வம்புழுத்து வருகிறார்கள்.தேசிய பேரிடர் என்ற பெயரை பயன்படுத்த சட்டம் விதி கிடையாது. ஒரு காரணம் இல்லை ஆனால் தேவைப்படும் உதவிகளை செய்ய மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது.
தமிழகத்திற்கு 860 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு இன்னும் கணக்கு கொடுக்கவில்லை. சேலத்தில் இளைஞர் அணி மாநாடு இந்தியா கூட்டணியில் பங்கேற்க பணிகளின் தான் கவனம் செலுத்தி வருகிறார்கள் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிக விரைவில் உதவி செய்ய இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் செவ்வாய் அன்று தூத்துக்குடி சென்று நேரடியாக ஆய்வு நடத்த உள்ளார்.
தமிழக அரசு சரியாகவும் முறையாகவும் பணிகள் மேற்கொள்ளாததால் மத்திய அரசு பணிகளை பொறுப்பெடுத்து பணிகள் மேற்கொள்ள உள்ளது. திமுகவிற்கு பொய் சொல்வது கைவந்த கலை. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து இருந்தது. அதனை தமிழக அரசு சரியாக கையாளாமல் குறை சொல்லி வருகிறார்கள். மழை காலத்தில் கூட திருநெல்வேலி மேயர் சேலம் மாநாட்டிற்காக வேலை செய்து கொண்டு இருந்தார்.அந்த மாநகராட்சி சேர்ந்த மேயர் கூட மக்களை பார்க்கவில்லை. தமிழகத்திற்கு எந்த நிறுவனமும் வருவதற்கு தயாராக இல்லை ஏனென்றால் திமுக அரசு அவர்களிடம் லஞ்சம் கமிஷன் போன்றவற்றை கேட்கிறார்கள். இது போன்று மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் மாநிலத்திற்கு வரக்கூடிய வருவாய் இழப்பீடு ஏற்படும். சென்னை வெள்ளத்திற்கு 450 கோடி ரூபாயும் பிறகு 550 கோடி என மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.