தந்தை பெரியார் சிலையை அவமதிப்பவர்களுக்கு கை இருக்காது.. வைகோ எச்சரிக்கை..!

By vinoth kumar  |  First Published Dec 24, 2023, 12:45 PM IST

சமூக நீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாலேயே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய தூத்துக்குடி செல்கிறார் என வைகோ கூறியுள்ளார். 

தந்தை பெரியாரின் 50 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ;- சமூக நீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக  பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறிவிட்டு யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது.

மத்திய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென்மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார் என வைகோ விமர்சனம் செய்தார்.

click me!