கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள். எதற்காக பேரறிஞர் அண்ணாவை சிறுமைப்படுத்தி பேச வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலை பேசி இருக்கிறார்.
ஏழை எளிய மகளிருக்கு ரூ.1000 வழங்காமல் திமுகவினருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அண்ணாமலை தன் பெயரிலேயே அண்ணாவை வைத்து கொண்டு இப்படி விமர்சனம் செய்யக்கூடாது. தமிழ் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது.
கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள். எதற்காக பேரறிஞர் அண்ணாவை சிறுமைப்படுத்தி பேச வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலை பேசி இருக்கிறார்.
தேசிய ஜநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்ததாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையின் கூட்டணி. ஏழை எளிய மகளிருக்கு ரூ.1000 வழங்காமல் திமுகவினருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கியதில் மாபெரும் குளறுபடிகள் நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.