தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஒருமையில் பேசிய சம்பவம் பொதுக்கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா மதுரை பொன்விழா கழக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்கள் குறித்து அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்;- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால் தற்போது தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிற நிலையில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் 50% மேல் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்குகளை திறந்து வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் இந்தத் திட்டத்தை முழுமையாக மூடியது கோணவாயன் ஸ்டாலின் என ஒருமையில் பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒருமையில் பேசிய சம்பவம் பொதுக்கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் அவதூறு பேச்சு தொடர்பாக விரைவில் திமுகவினர் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.