அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடலாம்.. உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா ? விஷால் கொடுத்த பதிலடி !

By Raghupati R  |  First Published Dec 14, 2022, 3:40 PM IST

ஜெயக்குமார் மேடைகளில் பாடும் போது அமைச்சர் உதயநிதி நடிக்க கூடாதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் விஷால்.


நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அப்போது பேசிய அவர், குடும்பமே ஒரு கழகம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதால், இனிமேல் திமுகவின் ஹெச்.ஆர் ஆக உதயநிதி இருப்பார். எப்போது பார்த்தாலும், ஆளுநர் தேவையில்லை என்று கூறிவந்தனர். 

இப்போது முதல்வர் தனது பிள்ளைக்கு பட்டம் சூட்டவும், இளவரசராக முடிசூட்ட மட்டும் ஆளுநர் தேவையா ? உதயநிதிக்கு வந்து பட்டத்து இளவரசராக முடிசூட்டுவதன் மூலமாக திமுகவை இனி ஒரு முடிந்த சகாப்தமாகத்தான் பார்க்க முடியும். திமுகவுக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள், கஷ்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

Latest Videos

undefined

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

ஆனால் வாழையடி வாழையாக அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஒரு அரசப் பதவிக்கு வருகின்றனர். உதயநிதியை பட்டத்து இளவரசராக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கனவு நனவாகியுள்ளது. இதனால், தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா, லண்டன் போல் ஆகப்போவதில்லை. ஒண்ணும் நடக்கப்போவது இல்லை. அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்றும் கடுமையாக கண்டித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று பதிலளித்தார் நடிகரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான விஷால். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் தருணத்தை கடந்த 9 ஆண்டுகளாக நேரில் பார்க்கவேண்டும் என்று எனக்கு கனவாக இருந்தது. தற்பொழுது அவர் அமைச்சரானதை பார்க்கும் பொழுது நண்பனாக மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க..2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ் !

முதல்வரின் மகன் என்று, எந்த இடத்திலுமே பெயரை பயன்படுத்தாமல், எளிமையாக தனது தனிப்பட்ட முறையில், தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் செயல்பட்டவர். தந்தை மற்றும் மகன் இருவரின் பேரும் இணைந்து உதயநிதி ஸ்டாலின் எனும் நான் என பதவியேற்கும் உதயாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் மேடையில் பேசும் போதெல்லாம் ஏதாவது ஒரு சினிமா பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பாடலாம், உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா என்று கேள்வி எழுப்பினார் விஷால். இனிமேல் நடிக்கப்போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

click me!