
இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே நாடு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள LE MAGIC LATERN PREVIEW THEATRE-ல் ஆர்த்தமன் புரோடக்சன் தயாரித்த ஹிந்து கீதம் என்ற பாடலை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹெச். வி.ஹண்டே வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசியவர்,140 கோடி இந்தியர்கள் உள்ள இந்தியாவில் 110 கோடி இந்துக்கள் உள்ளனர் என்று கூறினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடு என்றும் அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறினார். இந்தியாவை விட்டால் இந்துக்களுக்கு வேறு நாடு இல்லை என்வும் மற்ற மதத்தினருக்கு பல நாடுகள் உள்ளது என்றும் தெரிவித்த அவர், முஸ்லிம்களுக்கு பல நாடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அம்பேத்கரை நேரில் பார்த்தேன்
தொடர்ந்து பேசியவர், அம்பேத்கரைப் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் இவர்கள் எவரும் அம்பேத்கரை படிக்கவும் இல்லை பார்த்து இல்லையென்று தெரிவித்தார். அம்பேத்கரை நேரில் பார்த்தவன் நான் என்றும் அவரைப் பார்த்தவர்கள் பலர் இன்று இறந்து விட்டதாகவும் ஆனால் இன்றுவரை நான் இருப்பதாகவும் கூறினார். தனது 20 வயதின் போது சென்னைக்கு வந்த அம்பேத்கரை பார்த்ததாகவும் தெரிவித்தார், திருமாவளவன் மற்றும் இப்பொழுது இருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு அம்பேத்கரை பற்றி தெரியாது என்றும் கூறினார்.
திருமாவளவனுக்கு 0 மதிப்பெண்
மதிப்பெண் வழங்குவதென்றால் இளையராஜாவிற்கு 100% மார்க் தருவதாகவும், திருமாவளவனுக்கு 0% தருவதாகவும் விமர்சனம் செய்தார். திருமாவளவன் நல்ல மனிதர் என்றும் ஆனால் அவருக்கு ஒன்றுமே தெரியாது என விமர்சித்தார்.