பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைப்பு... அறிவித்தார் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

Published : May 06, 2022, 03:44 PM ISTUpdated : May 06, 2022, 03:48 PM IST
பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைப்பு... அறிவித்தார் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!!

சுருக்கம்

வேலைவாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக , உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

வேலைவாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக , உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதாகவும் நடப்புக் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 71 ஆயிரத்து 934 இடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறினார். வரும் கல்வி ஆண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  அதிகரிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள சுமார் 2 லட்சம் இடங்களில் 1 லட்சத்து 28 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக கூறினார். வரும் ஆண்டில் ஓரளவுக்கு தான் சேர்க்கை  இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆகையால்  திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், வரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க,  பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர்,   பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளாதாக கூறினார். பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பெண்களுக்கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார். பின் தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில், இளவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் மகளிர் கல்லூரி அமைத்துத் தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ஏற்கெனவே இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசியிருந்தேன். ஷிஃப்ட் முறை கொண்டுவந்து மகளிருக்கு தனியாக இடம் கொடுக்கலாம் என்று கூறியிருந்தேன். அதற்கு இன்று ஒரு பத்திரிகையில் தலையங்கம் எழுதியுள்ளனர். பெண்கள் ஆண்களைப் பிரித்து ஷிப்ட் முறையெல்லாம் கொடுக்கக்கூடாது. பெரியார் கொள்கையின்படி இருபாலரும் சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அதைத்தான் கூறினர். எனவே மகளிர் கல்லூரி என்று ஏற்படுத்துவதைவிட, இருபாலரும் சேர்ந்து படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத்தான் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சில இடங்களில் மாணவிகளுக்கு தனியாக கல்லூரி அமைக்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் முக்கியமாக வரும்போது, பரிசீலித்து முடிவெடுக்கப்படும். கள்ளக்குறிச்சியில் அந்த அவசியம் எழவில்லை என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி