அதிர்ச்சி செய்தி... திமுக முக்கிய பிரமுகரின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது..!

By vinoth kumarFirst Published Aug 1, 2021, 3:05 PM IST
Highlights

கரூர் தொகுதி முன்னாள் எம்.பி.யும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி (85). திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், தொழிலதிபரான இவருக்கு கரூர் மாவட்டம் மாயனூரில், கேசிபி பேக்கேஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனமும்,  புதுச்சேரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

முன்னாள் எம்.பி.யும், திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினருமான கே.சி.பழனிச்சாமியின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

கரூர் தொகுதி முன்னாள் எம்.பி.யும், அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி (85). திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், தொழிலதிபரான இவருக்கு கரூர் மாவட்டம் மாயனூரில், கேசிபி பேக்கேஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனமும்,  புதுச்சேரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கே.சி.பழனிச்சாமி மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து  பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை கடன் பெற்றிருந்தார். 

ஆனால், அதனை அவரால் திருப்ப செலுத்த முடியவில்லை. ஸ்டேட் பாங்க் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.197 கோடி மதிப்புள்ள பழனிசாமியின் சொத்துகளை ஏலம் விடும் அறிவிப்பை  கோவை ஸ்டேட் வங்கி நாளிதழ்களில் வெளியிட்டுள்ளது.

click me!