உடல்நலக்குறைவால் முன்னாள் திமுக எம்எல்ஏ உயிரிழப்பு.. அதிர்ச்சியில் உ.பி.க்கள்..!

Published : Jun 15, 2022, 11:53 AM IST
உடல்நலக்குறைவால் முன்னாள் திமுக எம்எல்ஏ உயிரிழப்பு.. அதிர்ச்சியில் உ.பி.க்கள்..!

சுருக்கம்

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன்.  இவர் 1996ஆம் ஆண்டு தேர்தலில், கபிலர்மலை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை திமுக நிராகரித்ததுடன், கட்சியின் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவரை இடைநீக்கம் செய்தனர். 

இதனையடுத்து, எந்த கட்சியிலும் சேராமல் ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில்,  கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கே.கே.வீரப்பன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!