திமுக முக்கிய நிர்வாகியை தட்டித்தூக்கிய எடப்பாடி... உச்சக்கட்ட டென்ஷனில் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 4, 2020, 11:51 AM IST
Highlights

அதிமுகவில் இணைந்த என்.கே.பெருமாள் நேற்று வரையில் திமுகவில் இருந்திருந்தாலும், தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசி. கடந்த 2001–2006 வரை இதே தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அத்துடன் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். இதே தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவான சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏவான மார்கண்டேயன் ஆகிய இருவரும் இவருடைய அரசியல் சீடர்கள்.

தூத்துக்குடி மாவட்ட அவைத் தலைவரும் விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.கே.பெருமாள் திமுகவில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

அதிமுகவில் இணைந்த என்.கே.பெருமாள் நேற்று வரையில் திமுகவில் இருந்திருந்தாலும், தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசி. கடந்த 2001–2006 வரை இதே தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அத்துடன் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். இதே தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவான சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏவான மார்கண்டேயன் ஆகிய இருவரும் இவருடைய அரசியல் சீடர்கள். 

2-வது முறை எம்.எல்.ஏ சீட் எதிர்பார்த்து கிடைக்காததால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் மாவட்ட அவைத் தலைவர் பதவி வகித்து வந்தவருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் என்.கே.பெருமாள் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- விளாத்திகுளம் தொகுதியைப் பொறுத்தவரையில் திமுகவில் இருந்தால் எப்போதும் முன்னேற முடியாது.

ஆகையால், நிர்வாகிகள் உணர்ந்து அதிமுகவில் இணைய முடிவு செய்தனர். விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளது. இங்கு தி.மு.க-வின் செல்வாக்கு குறைவுதான். அதேசமயம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனும் மூத்த அரசியல்வாதிகளை மதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எம்.பி.யாக இருந்தும் முக்கிய நிர்வாகி வெளியேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!