பிரதமருக்கு பாதுகாப்பு இருக்குமா ? பேரறிவாளன் விடுதலை - குண்டை தூக்கி போட்ட தங்கபாலு !

By Raghupati RFirst Published May 20, 2022, 3:15 PM IST
Highlights

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்த் கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு குழு விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டிக்கொண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாயில் துணியைக் கட்டிக்கொண்டவாறு கலந்து கொண்டனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, ‘யாரை குற்றவாளி எனக்கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ தற்போது அதே குற்றவாளியை விடுதலை செய்ததால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய் விட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதால், நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற தலைவர்களுக்கு வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

இதையும் படிங்க : நம்பி பழகிய காதலி.. நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !

click me!