பதவி ஆசை பிடித்த பழனிச்சாமி கல்யான விட்டில் மாப்பிள்ளையாகவும், எழவு விட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என எல்லா பதவிக்கும் ஆசைப்படுபவர் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் அடுத்த ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடைபெறும் தொண்டர்களின் உரிமை மீட்பு குழு, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், ஜெயகுமார் பைத்தியகாரர் போல் பேசி வருகிறார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பது தான் ஓபிஎஸ் ஆசை என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. இபிஎஸ் மட்டும் பிரிந்து சென்றுள்ளார். அதிமுக கரை வேட்டி கட்ட கூடாது, சின்னம் பயன்படுத்த கடாது என நீதிமன்றம் எனக்கு மட்டும் தான் தீர்பளித்தது. அன்றில் இருந்து நான் கரை வேட்டி கட்டுவதில்லை. நான் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவன். நாடாளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும்.
புரோட்டா போட தெரிந்தவர்கள் தான் ஹோட்டல் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - மை வி3 ஆட்ஸ் நிறுவனர்
தமிழகத்தில் தங்கள் அணி தான் சிறந்த எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஜெயக்குமார் ஒரு பதவி வெறி பிடித்தவர் எனவே அவர் கருத்துக்கு பதில் அளிக்க தேவை இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. நிச்சயம் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். இரண்டு அணிகளையும் இணைப்பது தான் சின்னம்மாவின் ஆசை.
இந்தியாவை விற்று வாங்கும் அந்த 4 பேர் - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு!
இரு அணிகளை இணைப்பதற்கு சின்னம்மா முயற்சி செய்தார்கள். ஆனால் இபிஎஸ் பதவி ஆசையால் அதை ஏற்கவில்லை. தமிழகத்தில் எங்கள் அணி தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பழனிச்சாமி பதிவி ஆசை பிடித்தவர். தான்தோன்றி தனமாக, நம்பிக்கை துரோகம் செய்து பதவி கொடுத்தவரை கீழ்தரமாக பேசி வரும் பழனிச்சாமிக்கு தொண்டர்கள் இன்னும் பத்து நாட்களில் பாடம் புகட்டுவார்கள். இது உறுதியாக நடக்கும். எடப்பாடி பழனிச்சாமி கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், எளவு வீட்டில் பிணமாக இருக்க ஆசைப்படுபவர் என கூறினார்.