கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கிடு பற்றியும், தொகுதிகளின் பெயர்கள் பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும். நான் தன் கொடியையும் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று தீர்ப்பு உள்ளது தொண்டர்களுக்கு அந்த தீர்ப்பு இல்லை.
வருகின்ற தேர்தலில் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்: கடந்த நான்கரை ஆண்டுகள் பாஜகவின் தயவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால் இன்று கூட்டணி இல்லை என்று சொல்லி அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துள்ளார். இபிஎஸ் பொதுச்செயலாளராகி அதிமுகவை ஐந்தாக உடைத்திருக்கிறார்.
undefined
இதையும் படிங்க: நாங்கள் வயதானவர்கள் என்றால் எடப்பாடி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் இளைமையானவர்களா.? சேலஞ்சர் துரை அதிரடிகேள்வி
நம் கலாச்சாரத்தை பண்பாட்டை பாதிக்கும் எந்த கூறுகள் பொது சிவில் சட்டத்தில் இருந்தாலும் அவற்றை நாம் எதிர்ப்போம். மக்களின் பண்பாட்டை மதிக்கும் சட்டங்களை நாம் வரவேற்போம். பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என நங்கள் கூறுகிறோம். ஒன்றிணைய வேண்டாம் என எடப்பாடி கூறுகிறார். ஒன்றிணைந்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் கருத்துக் கணிப்புகளின் உண்மை தன்மை தெரிய வரும். விஜய் கட்சி தொடங்கியவுடன் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளேன். அவசர சட்டத்தை இயற்றி மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற காரணம் நான் தான். அதை மாற்றி பேசும் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி இந்த கட்சியை சிதைத்து சின்னா பின்னமாக்கியுள்ளார். இந்த கழகத்தை காக்க தான் தொண்டர்களை நோக்கி சென்றுள்ளோம். வருகின்ற தேர்தலில் தொண்டர்கள் எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். எடப்பாடி இல்லாத அண்ணா திமுக நிச்சயம் உருவாகும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அவர்கள் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. அதில் ஒன்று தான் இந்த மருத்துவ கல்லூரிகள் வாக்குறுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை சில விதிகளின் படி நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என என்னிடம் ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆ ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.. இது தான் அவருக்கான தண்டனை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கிடு பற்றியும், தொகுதிகளின் பெயர்கள் பற்றியும் விரைவில் அறிவிக்கப்படும். நான் தன் கொடியையும் பெயரையும் பயன்படுத்த கூடாது என்று தீர்ப்பு உள்ளது தொண்டர்களுக்கு அந்த தீர்ப்பு இல்லை. சட்டத்தின் மூலம் வேட்டியையும் கொடியையும் பயன்படுத்த முடியாது என சொல்லலாம். ஆனால் எங்கள் உடம்பில் ஓடும் அதிமுக ரத்தத்தை தடை செய்ய முடியுமா? உறுதியாக எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம். பதவி இல்லாததால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுவதாக இபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்.