தேனி மாவட்டம் கம்பம் அருகே தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இல்லத்திற்கு சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுமணத் தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி மரியாதை நிமித்தாக சந்தித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனின் மகள் சாந்தினிக்கு திருமண விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடமும் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மரியாதை நிமித்தமாக அழைப்பிதழை வழங்கி இருந்தார்.
அதன் அடிப்படையில் திருமண நாளன்று வெளியூரில் இருந்ததால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இன்று சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த ஓ. பன்னீர்செல்வம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் உள்ள தங்க தமிழ்செல்வன் இல்லத்திற்கு சென்று மணமக்களை ஆசீர்வதித்து மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டார்.
முதல்வரின் பாதுகாப்பிற்காக சென்ற ஆம்புலன்ஸ்? அரசு நடத்திய போட்டியில் மயங்கி விழுந்த மாணவன் பலி
இந்த சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தி.மு.க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டு மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.