அதிமுக தொண்டர்களாக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்கள் கருத்தறிந்து முடிவு அறிவிக்கப்படும். மேல்முறையீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கிய சிறப்பு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் கூறியது.
undefined
இதையும் படிங்க;- இபிஎஸ் கொடநாடு குறித்து எழுத வேண்டாம் சொன்னார்.. பகீர் உண்மையை போட்டுடைத்த மருது அழகுராஜ்.. !
இதுதொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக தொண்டர்களாக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்கள் கருத்தறிந்து முடிவு அறிவிக்கப்படும். மேல்முறையீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க;- கனகராஜ் ஜெயலலிதா கார் டிரைவர் கிடையாது.. கொடநாடு கேள்வியால் கடுப்பான இபிஎஸ்.!
கொடநாடு கொலை வழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. விசாரணை சரியான திசையில் சென்று கொண்டுள்ளது. முடிவு மக்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார். மதுரையில் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற மாநாடு முடிந்துபோன புளியோதரை என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். மேலும் இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓபிஎஸ் பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.