ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கையா? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கொடுத்த நச் பதில்..!

By vinoth kumar  |  First Published Aug 26, 2023, 7:25 AM IST

சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள்  பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை படித்து பார்த்தவுடன் 3 நாள் வரை தூக்கம் வரவில்லை என கூறினார்.


அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கினை தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்ததை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள்  பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தன. இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை படித்து பார்த்தவுடன் 3 நாள் வரை தூக்கம் வரவில்லை என கூறினார். மேலும் 3 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கினை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலை வரும்..! ஆர் என் ரவிக்கு ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை

இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் இந்த நடவடிக்கைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை தான் பார்க்க வேண்டும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாகவும், திமுக மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் நீதிபதி நடந்துகொள்கிறார். இது பழிவாங்கும் நடவடிக்கை போல் தான் இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

இதையும் படிங்க;-  திமுக மீது நீதிபதி பாகுபாடு காட்டக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி சரமாரி குற்றச்சாட்டு!

இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. சட்டப்படியான கடமையையே செய்துள்ளேன். இது குறித்து பொதுவாழ்வில் இருப்பவர்கள் கருத்து சொல்வதை பற்றி கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

click me!