திமுக மாபெரும் வெற்றி.. தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த சண்முகம்..!

By vinoth kumarFirst Published May 3, 2021, 4:06 PM IST
Highlights

 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் பதவியை முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.

 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் பதவியை முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தவர் சண்முகம். இவர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 2019ம் ஆண்டு பொறுப்பேற்றார். 1985ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அவர் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்கும் முன்னர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்து வந்தார். 

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை வேகமாகப் பரவியபோது தமிழக டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக சண்முகம் ஒருங்கிணைத்து இயக்கினார். அவரது சிறப்பான ஒருங்கிணைப்பு மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது பணி ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 31ம் தேதியன்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்புக்கொண்டார்.

அதன் பின்னர் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராகப் பதவியேற்றார். இதனையடுத்து, திமுக ஆட்சி அமையும் சூழலில் தலைமை செயலாளருக்கு ராஜினாமா கடிதத்தை சண்முகம் அனுப்பி வைத்தார். 

click me!