முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை காலமானார்..!

By Manikandan S R SFirst Published May 6, 2020, 9:16 AM IST
Highlights

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வந்தார். அதன்பிறகு பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். செங்கல்பட்டு அருகே இருக்கும் இரும்பேடு கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்த தலித் எழில்மலை ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்தார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியிடமிருந்து கே. சைனிக் சேவா பதக்கம் பெற்றிருந்தார். ராணுவ பணி காலத்திற்குப் பிறகு பாமகவில் இணைந்த அவர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வந்தார். அதன்பிறகு பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற திருச்சி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வில் இருந்த அவர் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மதுராந்தகம் அருகே இருக்கும் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

click me!