அதிமுக முன்னாள் எம்.பி.யை தட்டித்தூக்கிய பாஜக.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jun 9, 2023, 1:33 PM IST
Highlights

புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் அதிமுகவின் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். 

கடந்த 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் புற்றுநோய் மருத்துவரான அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார். 

இதையும் படிங்க;- அப்போ வானத்திற்கும் பூமிக்கும் குதித்தீங்க.! இப்போ என்ன செய்ய போறீங்க.? - ஸ்டாலினை சீண்டும் இபிஎஸ்

அதன் பிறகு ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவி அவருக்கு ஆதரவாக இருந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்து வந்த மைத்ரேயன் திடீரென ஓபிஎஸ் பங்கேற்கும் எந்த நிகழ்விலும் பங்கேற்றாமல் ஒதுங்கியே இருந்து வந்தார்.

இதையும் படிங்க;- அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த இபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?

இந்நிலையில்,  டெல்லியில் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்து ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

click me!