இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

By Raghupati RFirst Published Jul 5, 2022, 5:05 PM IST
Highlights

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதற்கான மனுவை தனி நீதிபதியிடம் முறையிடலாம் என கூறிவிட்டது. ஆகவே அதிமுக பொதுக்குழு நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். 

அன்றைய தினம் தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். அன்றைய தினம் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதிமுக நிர்வாகிகள் அறிவித்தார்கள். இந்தக் கூட்டத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டி மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடினர். 

மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

அத்துடன் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.  ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதற்கான மனுவை தனி நீதிபதியிடம் முறையிடலாம் என கூறிவிட்டது. ஆகவே அதிமுக பொதுக்குழு நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் எம்பியான கே.சி பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை அளித்துள்ளார்.

அதில், ‘கட்சியின் உயர்ந்த பதவிக்கு உரிய நபர்களை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் விதி.  ஆனால் 2017 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. புதிதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பொதுச்செயலாளருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் இந்த இருவருக்கும் மாற்றப்பட்டன. ஆனால் இவர்கள் இருவருக்கும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

ஆகவே இந்த இருவரால் செய்யப்பட்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் அனைத்தையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளகளை கட்சியின் தொண்டர்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கலாம் என்று  திருத்தம் செய்யப்பட்டது. ஆகவே பொதுச்செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்யும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுக்க போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

click me!