அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு 4 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 29, 2021, 8:58 PM IST
Highlights

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன சேலம் தொகுதியில் 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக பரமசிவன் இருந்தார். அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 1998ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். சுமார் 20 ஆண்டுகளாக இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபராத தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் சிறை தண்டனை கூடுதலாக ஓர் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பரமசிவன் தனது மகன்கள் பெயரில் சில சொத்துகளை வாங்கியிருந்தார். அந்த சொத்துகளும் அரசுடைமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

click me!