#BREAKING கொங்கு மண்டலத்தை கொஞ்சம், கொஞ்சமாக வளைக்கும் DMK.. அதிமுக முன்னாள் அமைச்சரை தட்டித்தூக்கிய ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Jul 11, 2021, 11:23 AM IST
Highlights

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 900 பேருடன் திமுகவில் இணைந்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 900 பேருடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக தோப்பு வெங்கடாச்சலம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் பதவி வங்கினார். பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை. 

இதனையடுத்து, டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைக்கு பின்னர் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார். பிறகு செங்கோட்டையன், கருப்பண்ணனை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. 

இதனால், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டதால் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார். பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றிபெற்றார்.

இதனால், அதிமுக தலைமை மீது தோப்பு வெங்கடாசலம் கடும் அதிருப்தியில் இருந்த வந்தார். இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 900 பேருடன் திமுகவில் இணைந்தார்.

click me!