Thangamani : சோதனை மேல் சோதனை.. முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் 'மீண்டும்' ரெய்டு !

By Raghupati R  |  First Published Dec 20, 2021, 8:02 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்  சோதனை நடத்தி வருகின்றனர்.


முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்  சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி 69  இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.16 கோடி பணம் , 1.13 கிலோ தங்கம்,  சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள் ,சேலத்தில் ஓரிடத்தில் என சோதனை நடைபெற்று வருகிறது.  

Tap to resize

Latest Videos

undefined

தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்கள் சொந்தமான 69  இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.மேலும் ஐந்தாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 4.85 கோடி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தங்கமணி மட்டுமல்லாது அவரது மனைவி சாந்தி , மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் விசாரணையின்  தொடர்ச்சியாக மீண்டும் இன்று காலை 6.30 மணியளவில்  14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. 

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள்  எஸ் பி வேலுமணி ,சி விஜயபாஸ்கர் ,கே சி வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கர்  ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த நடத்திய நிலையில் ஐந்தாவது நபராக தங்கமணி சோதனைக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள, தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!