
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ?
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மனங்கள் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது இதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் வாக்கெடுப்பு மூலமாக தலைமையை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதனையும் ஏற்க தயாராக இருப்பதாக இபிஎஸ் கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதுகுறித்து மாவட்ட தலைவர்கள் தலைமை கழக நிர்வாகிகளிடம் சுமார் நான்கரை மணி நேரம் , கருத்து சுதந்திரம் அடிப்படையில் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஆரோக்கியமான விவாதம் நடந்தது , நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டோம் என தெரிவித்தார்.
காலத்தின் கட்டாயத்தில் ஒற்றை தலைமை அவசியம்
பொதுக்குழு முன்பாக நடந்துள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று கூறியுள்ளனர். மேலும் ஒற்றை தலைமையின் அவசியம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அவர்களது முழு கருத்துக்களையும் ஜனநாயக முறைப்படி தெரிவித்தனர். யார் தலைமை என்பது வரும் நாட்களில் கட்சித் தலைமை முடிவு செய்யப்படும். காலத்தின் கட்டாயத்தால் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றது. தற்போது சூழல் மாறியுள்ளது. எனவே ஒற்றைத் தலைமை அவசியம் என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். 2ஆயிரத்து 6 ஆயிரம் பேர் செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் பொதுக்குழுவில் பங்கேற்க இருப்பதால் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க மனமிருக்கு , ஆனால் இடபற்றாக்குறையால் ஆழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார். கட்சிக்கு தொடர்பு இல்லாத சசிகலா குறித்து விவாதித்து நாங்கள் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். சசிகலா யார் அவரைப்பற்றி அதிமுக கூட்டத்தில் விவாதிப்பதற்கு என கேள்வி எழுப்பினார். தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சி யார் என்பதற்கு அவசியம் இல்லை , பாமக , பாஜகவை காட்டிலும் அதிமுகதான் முதன்மையான கட்சி மற்ற கட்சிகளெல்லாம் உதிரி கட்சிகள் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்