திரைப்பட சூட்டிங்க் ஸ்பாட்டில் இருக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் - காட்டமாக விமர்சிக்கும் அண்ணாமலை !

By Raghupati RFirst Published Jun 14, 2022, 3:56 PM IST
Highlights

Annamalai : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் பக்கமே செல்வதில்லை. பட ரீலிஸ் நிகழ்வுகளிலும் சூட்டிங் ஸ்பாட்டிலும் தான்  இருக்கின்றார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘டெல்லியில் இன்பொர்ஸ்மென்ட் டைரக்ட்ரேட் சட்டத்திற்கு உட்பட்டு இந்திய நாட்டின் பிரஜை, ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். அதற்க்கு காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கூச்சல், குழப்பங்கள் ஏற்படுத்தி அங்கு இரண்டு பேரிகார்டுகளை உடைத்து, அங்கு மக்கள், பணிக்கு செல்லுவதை தடுத்து பெரிய அளிவில் கூச்சலிட்டுள்ளனர். 

காங்கிரஸ் எதற்க்காக இந்த கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். எதற்காக காங்கிரஸ் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு, ஒரு பயத்தின் அடிப்படையில் தவறு செய்யாதது போன்று நடித்து கொண்டிருக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் பக்கமே செல்வதில்லை. பட ரீலிஸ் நிகழ்வுகளிலும் சூட்டிங் ஸ்பாட்டிலும் தான்  இருக்கின்றார். 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கின்றார் அவர். கேரளாவில் முதலமைச்சர் தங்கத்தை கடத்தி வருகின்றார். இந்த வழக்கில் தங்கத்தை கடத்திய ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்று தெரிவித்த பின்னரும் இவர்கள் அரிச்சந்திரனை போன்று பேசி வருகின்றனர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கூட தற்போது இல்லை. 

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

ஒரு காலத்தில் இருந்தார்கள். தற்போது அவர்களின் கூட்டனி என்ன என்பதை என்னி பார்க்க வேண்டும். மில் தொழிலாளிகளுக்காக எந்த கம்யூனிஸ்ட் கட்சி சண்டை போட்டார்களோ, அந்த மில்களை நடத்தும் உரிமையை ஜி ஸ்கொயர் எடுத்துள்ளனர். லுலு தமிழ்நாட்டுக்கு வருகின்றது. இதன் வருகையால் பாதிப்படைவது யார் என்று ஏற்கனவே பேசியிருக்கின்றோம். கர்நாடகா, யுபியை விட தமிழகத்தில் சிறு குறு வணிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

லுலு வருகையால் பாதிப்படைவது அவர்கள் தான். அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடாத கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிற்கு சாமரசம் வீசி கொண்டிருக்கின்றனர். கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்ட முதல்வர் குறி்த்து முதலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச தயாரா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

click me!