AIADMK: பண மோசடி வழக்கு.. கைதுக்கு பயந்து கணவரோடு தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Nov 12, 2021, 1:27 PM IST
Highlights

நேற்று முன்தினம் மீண்டும் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை வருகிற 15 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் சரோஜாவும், அவரின் கணவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

பண மோசடி வழக்கில் ஜாமீன் மனு மீதான விசாரணையை 3வது முறையாக நாமக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள நிலையில், எந்த நேரத்திலும் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் முன்னாள் அமைச்சர் சரோஜாவிம், அவரது கணவரும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, ராசிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினரான குணசீலன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சர் சரோஜா, 'நீங்கள் சத்துணவு வேலைக்குப் பணம் வாங்குங்கள். நான் தொகுதியில் வீடுகட்ட வேண்டும்' என்று என்னையும் என் மனைவியையும் அழைத்துச் சொன்னார். அதன்பிறகு, என் மனைவி மூலம், 15 நபர்களிடமிருந்து ரூ.76,50,000 பெற்று, சரோஜாவிடமும் அவர் கணவர் லோகரஞ்சனிடமும் இரண்டு தவணைகளாக மொத்தப் பணத்தையும் கொடுத்தேன். அந்தப் பணத்தை வைத்துத்தான், தற்போது லோகரஞ்சன் ராசிபுரத்தில் ஒரு வீட்டை கிரையம் செய்திருக்கிறார். 

இதையும் படிங்க;- போலீஸ் மரணத்துக்கு இழப்பீடு கொடுத்தீங்களே.. அரசு அலட்சியத்தால் இறந்த இளைஞருக்கு? பாயிண்டை பிடித்த பாஜக..!

பின்னர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்ட சரோஜா, அவர் கணவர் லோகரஞ்சன், அதற்குப் பிறகு திட்டமிட்டு எங்களைத் தவிர்த்தனர். இது தொடர்பாக, இரண்டு முறை முன்னாள் அமைச்சரை நேரில் சந்திக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. அப்போது தொடர்ந்து பேச முயன்றபோதுதான், 'உன்னைத் தொலைத்துவிடுவேன். நான் அமைச்சராக இருந்தவள். என்னை மீறி உன்னால் என்ன செய்ய முடியும்?' என்று அவர் கணவருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தார். இந்தத் தொகையைக் கேட்டு சில பேர் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். 

இதையும் படிங்க;- இந்து பண்டிகையில் தலையிட்டால் விளைவு வேற மாதிரி இருக்கும்.. மதவெறியர்களுக்கு ஹெச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை..!

கடன் தொல்லையால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டால், அதற்கு சரோஜாவும், அவர் கணவரும், அவரின் மருமகன் ராஜவர்மனும்தான் காரணம். எனவே, முன்னாள் அமைச்சரிடமிருந்து எனக்கு வரவேண்டிய ரூ.76,50,000 ரூபாயைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குணசீலன் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குணசீலன் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 29 -ம் தேதி  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், கடந்த 1-ம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது, விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன்ஜாமீன் மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை வருகிற 15 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகாமல் சரோஜாவும், அவரின் கணவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களது செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது  சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

click me!