வழக்கு, கைது, பிரேமலதா?: திகிலாகும் தே.மு.தி.க. நிர்வாகிகள்

 
Published : Nov 07, 2017, 10:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
வழக்கு, கைது, பிரேமலதா?: திகிலாகும் தே.மு.தி.க. நிர்வாகிகள்

சுருக்கம்

for dmdk Will the case come back again

’மீண்டும் அந்த வழக்கு காலம் திரும்பி வந்துவிடுமோ?!’ என்று திகிலடித்துக் கிடக்கின்றனர் தே.மு.தி.க.வினர். 

விவகாரம் என்ன தெரியுமா?...தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஓரளவு உடம்பு நலன் தேறியிருப்பதால், கட்சி மீட்பு நடவடிக்கையில் மளமளவென இறங்கியிருக்கிறார். இதனால் இரண்டு வாரங்களுக்கு ஒரு மாவட்டத்தில் ஏதாவது ஒரு மக்கள் பிரச்னையை வைத்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கூட்டம் கூடியிருந்தும் கூட விஜயகாந்த் ஐந்து நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துக் கொண்டதால் கட்சியினர் அப்செட். 

இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று உடுமலைப்பேட்டையில் அணை பிரச்னையொன்றை எடுத்து வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது அக்கட்சி.

இதில் சிறப்பு பேச்சாளராக பேசிய பிரேமலதா அ.தி.மு.க.வினரைப் போட்டுப் பொளந்து கட்டியிருக்கிறார். 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியில் ஆரம்பித்து அமைச்சர் பெருமக்கள் வரை அத்தனை பேரையும் அர்சித்துக்  கொட்டினார். குறிப்பாக அவர் ஒருமையில் குறிப்பிட்டுப் பேசியது!

கடந்த முறை அ.தி.மு.க. வென்றதே கேப்டனால்தான் என்று கூறியவர், அமைச்சர்கள் அவரது காலை தொட்டுக் கும்பிட்டனர் என்றும், இன்னமும் போட்டுத் தாக்கியது தே.மு.தி.க.வினரையே அதிர வைத்தது. 

இது போதாதென்று, தே.மு.தி.க.வை காலி செய்ய நினைத்தார் ஜெயலலிதா ஆனால் இன்று அவரது கட்சி காலியாகிவிட்டது. கேப்டன் டி.வி.யையும், முரசு சின்னத்தையும் முடக்க நினைத்தார்.

ஆனால் இன்று இரட்டை இலை சின்னம் முடங்கிக் கிடக்க, ஜெயா டி.வி.யின் நிலையோ பரிதாபமாய் இருக்கிறது என்று விளாசினார். விஜயகாந்தை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் விமர்சிப்பதற்கு எதிராக பிரேமலதா விட்ட சவால்களெல்லாம் அதிர்வேட்டு ரகங்கள். 

அத்தோடு நிறுத்தினாரா!? விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்று அ.தி.மு.க.வினர் கிண்டல் செய்கிறார்களே, ‘அன்று எம்.ஜி.ஆர். பேசியது புரிந்ததா?’ என்று ஃபைனல் பஞ்ச் வைத்து முடித்தார் கறுப்பு எம்.ஜி.ஆரின் மனைவி. 

இந்நிலையில் தே.மு.தி.க.வின் மேடை நிகழ்வுகள் அத்தனையையும் போலீஸ் வீடியோவில் பதிவு செய்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக அதைப் போட்டுப் பார்த்த அதிகார மையங்கள், அதிர்ந்தும், அதிருப்தியாகியும் அதை அப்படியே அரசின் உச்ச அதிகார மையத்துக்கு அனுப்பியிருக்கின்றனர்.

அ.தி.மு.க.வில் பிரேமலதாவின் பேச்சைத் தொட்டு சில கோபதாபங்கள் உருவாகியிருக்கின்றனவாம். 

இதனால் அவர் மீது வழக்கு பாயுமா? என்று தே.மு.தி.க.வினர் பதறுமளவுக்கான ஒரு சூழல் உருவாகி இருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வின் கடந்த ஆட்சியில் (ஜெ., இருந்தபோது) விஜயகாந்த், பிரேமலதா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் மீது அவதூறு வழக்கு போட்டு தீட்டப்பட்டது.

காரணம், அவர்கள் முதல்வர் ஜெ.,வையும், அரசையும் கடுமையாக விமர்சித்ததுதான். ஆக அப்படியொரு நிலை மறுபடியும் துவங்கிவிடுமோ? என்று அஞ்சுகின்றனர்.

ஆனால் அ.தி.மு.க.வில் ஒரு தரப்போ ‘பிரேமலதா மேலே வழக்கு, கைதுன்னு நடவடிக்கை எடுத்து அவரை வளர்த்துவிடல்லாம் மாட்டாங்க எங்காளுங்க. ஏன்னா, இப்படி வழக்கு  மற்றும் கைதுன்னு ஏதாச்சும் நடந்து அரசியல் ரீதியாக தன்னை பரபரப்பாக்கிக்கதான் விஜயகாந்த் டீம் துடிக்குது. அதுக்கு எங்க தலைமை நிச்சயம் வழி பண்ணமாட்டாங்க.’ என்று நறுக்கென பதில் தருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!