சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தடைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது.
தவறான சிகிச்சையால் உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை வியாசர்பாடியை பிரியா (17). சிறுவயது முதலே முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தடைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் மண்ணோடு மண்ணா போச்சு.. டாக்டர்கள் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனை பிரியா பலி.!
undefined
இதனையடுத்து, பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது வலி குறையவில்லை. கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த போது அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் கூறியுள்ளனர். இதனையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் அடுத்தடுத்து செயலிழந்ததை அடுத்து கால்பந்து வீராங்கனை பிரியா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- கண்டா வர சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்க.. கரூர் எம்.பி. ஜோதிமணி குறித்து வைரலாகும் போஸ்டர்..!
இதனையடுத்து, அவரது உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். பின்னர், தவறான சிகிச்சையால் உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- பேருந்து நிலையத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !