ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை.. சிறப்பு நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

Published : Sep 29, 2021, 12:14 PM ISTUpdated : Sep 29, 2021, 12:25 PM IST
ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை.. சிறப்பு நீதி மன்றம் அதிரடி  தீர்ப்பு.

சுருக்கம்

பின்னர் இந்த வழக்கில் அவரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார், பல சாட்சியங்கள் மற்றும் பல கட்டங்களைத் தாண்டி வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 15. 45 லட்சம் ஒதுக்கி மோசடி செய்த வழக்கில் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு  ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் இந்திர குமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் என்பவர் இறந்துவிட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 1991 -1996  ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அப்போது அவரது கணவர் பாபு, வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்காக அறக்கட்டளை ஒன்று நடத்தி வந்தார். அப்போது சமூகநலத்துறை அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தனது கணவரின் நிறுவனத்திற்கு 15. 45 லட்சம் ரூபாய் நித ஒதுக்கீடு செய்ததாக இந்திரகுமாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று அப்போதைய சமூக நலத்துறை செயலாளர் அளித்த புகாரின் பேரில் இந்திர குமாரி அவரது கணவர் பாபு உள்ளிட்ட 5 பேர் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டது. 

அதனையடுத்து எம்.பி எம்எல்ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இருந்தார். பின்னர் இந்த வழக்கில் அவரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார், பல சாட்சியங்கள் மற்றும் பல கட்டங்களைத் தாண்டி வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,15. 45 லட்சம் ஒதுக்கி மோசடி செய்த வழக்கில் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் இந்திர குமாரிக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டினை விதிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் சென்னையில் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில் வெங்கடகிருஷ்ணன் என்பவர் எடுக்கப்பட்டதாகவும் நீதிபதி கூறியுள்ளார் குற்றவாளி என திறக்கப்பட்டுள்ள  இந்திர குமாரி ஜெயலிதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2006ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் தற்போது அவர் திமுகவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!