உள்ளட்சி தேர்தலில் ஜெயிக்க திமுக போடும் தகிடுதித்தங்கள்... அண்ணாமலை அதிர்ச்சி..!

Published : Sep 29, 2021, 11:39 AM IST
உள்ளட்சி தேர்தலில் ஜெயிக்க திமுக போடும் தகிடுதித்தங்கள்... அண்ணாமலை அதிர்ச்சி..!

சுருக்கம்

திமுக தேர்தலுக்கு முன் சொன்னது ஒன்று தற்போது செய்வது வேறு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது திமுகவின் வழக்கமாக உள்ளது.   

மக்கள் பயன்பெறும் திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் தான். ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு போட்டோ ஒட்டுவதில் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது என பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா, அதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை கீழநத்தம் பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “மக்களுக்கான திட்டங்களில் 80% மத்திய அரசுடையதுதான். மாநில அரசுடையது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி படை பலம், பண பலத்தை தாண்டி நல்லவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தேர்தலுக்கு முன் சொன்னது ஒன்று தற்போது செய்வது வேறு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவது திமுகவின் வழக்கமாக உள்ளது.

 

மத்திய அரசு திட்டத்தில் அவர்களுடைய போட்டோ ஒட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், மத்திய அரசின் திட்டத்தை லஞ்ச லாவண்யம் இன்றி பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் இருக்க வேண்டும். நாம்தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி