மீன்பிடி தடைகாலம் தொடங்கியது.. 61 நாட்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2021, 1:25 PM IST
Highlights

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளான, திருவள்ளூரின், ஆரம்பாக்கம் முதல் கன்னியாகுமரி வரை, ஏப்., 15 ல், துவங்கி, ஜூன், 14 வரை, மீன்கள் இனபெருக்க காலமாக கருதப்படுகிறது.

மீன்பிடி தடை காலம் இன்று முதல் துவகி உள்ள நிலையில், தடைகாலத்தில் அரசு வழங்கும், நிவாரண தொகை போதவில்லை என்றும், 61 நாட்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுகிறது. இந்திய கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக சில குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். காசிமேட்டில் மீன்பிடித் தடை காலம் துவங்கியதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுகள், இன்று முதல், மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லமாட்டர். இதனையடுத்து வலை, என்ஜின்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

தமிழக கிழக்கு கடற்கரை பகுதிகளான, திருவள்ளூரின், ஆரம்பாக்கம் முதல் கன்னியாகுமரி வரை, ஏப்., 15 ல், துவங்கி, ஜூன், 14 வரை, மீன்கள் இனபெருக்க காலமாக கருதப்படுகிறது. இதனால், இந்த, 61 நாட்கள், மீன்பிடித் தடைகாலம் அமலில் இருக்கும். இந்த மீன்பிடி தடைகாலத்தால், 50 லட்சம் மீனவர்கள் நேரடியாகவும், பல லட்சம் பேர் மறைமுகமாகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த தடை காலத்தை சமாளிக்கும் பொருட்டு, அரசால், 61 நாட்களுக்கு, தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. இது குறித்து, மீனவ சங்க  தலைவர் பாரதி கூறியதாவது: மீன்பிடி தடைகாலத்தில் வழங்கும், நிவாரண தொகை போதவில்லை. 

நாளொன்றுக்கு, 350 ரூபாய் வீதம், 61 நாட்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேபோல் தற்போது நடைமுறையில் உள்ள, மீன்பிடி தடைக்காலத்தை அக்., முதல் டிசம்பர் வரை என மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் கடந்த ஆண்டு மீன்பிடித்தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை, இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
 

click me!