கர்நாடகா பட்டாசு விபத்து..13 தமிழர்கள் உயிரிழப்பு.. நிவாரணம் அறிவித்த கையோடு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

By vinoth kumar  |  First Published Oct 8, 2023, 6:48 AM IST

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.


தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கி வந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி உதவியை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிவிப்பில்;- தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் நேற்று  (7-10-2023) ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்".. திட்ட அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டம் - பங்கேற்ற அமைச்சர் உதயநிதி!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் அனுப்பிவைத்துள்ளேன்.

இதையும் படிங்க;-  இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும்? வெளியான அறிவிப்பு!

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட உத்தவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

click me!