சென்னையில் சுங்கத்துறைக்கான வைகை கட்டிடம்..! அடிக்கல் நாட்டிய நிர்மலா சீதாராமன்

By Ajmal Khan  |  First Published Dec 19, 2022, 9:47 AM IST

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சென்னையில் அமைய உள்ள சுங்க இல்லத்தின் அலுவலக கட்டிடம் நாட்டிற்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 


சுங்கத்துறை- வைகை கட்டிடம்

சென்னை ராஜாஜி சாலையில்  சுமார் ரூ 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட 'வைகை'  சுங்கத்துறை மாளிகை வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க ஊக்குவிக்க பல்வேறு செயல்களை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக கூறினார். பெண் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள், சுவச் பாரத் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கி இந்த கட்டிடம் அமைய இருப்பது பாராட்டு கூறியது,மேலும் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார்.

Tap to resize

Latest Videos

தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படை கொடூரத் தாக்குதல்..! இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் -அன்புமணி ஆவேசம்

பசுமை கட்டிடம்

கட்டிட நிபுணர்கள் மூலம் புதிய தொழில்நுட்பத்தை இந்த புதிய கட்டிடமாக வைகை இல்லம் அமைய உள்ளது. நாட்டில் இதற்கு பிறகு கட்டப்படும் கட்டிடங்களுக்கு முன்னுதாராணமாக இந்த கட்டிடமாக இருக்கும் அளவில் கட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத அளவிலும், குறைவான மின்சார பயன்பாடு இருக்கும் வகையில் வீடுகள் இல்லங்கள் அலுவலகங்கள் கட்டிட வேண்டும் என வலியுறுத்தினார். மொத்தக் கட்டுமானப் பணிகளும்  பசுமைக் கட்டிடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்டப்படுவதால், சுற்றுசூழலை மாசுபாடுகளிடம் இருந்து தடுக்க முடியும் என்றார். இந்த ‘வைகை’யில் பணியாற்றுபவர்களுக்கு பணிச்சூழல் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் இந்த கட்டிடம் நிறைவடைந்து செயல்படத் தொடங்கிய பிறகு, இதனை சுங்கத் துறை தலைமையகத்துடன்  இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிமுக முன்னாள் எம்பிக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்

click me!