தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படை கொடூரத் தாக்குதல்..! இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் -அன்புமணி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Dec 19, 2022, 8:46 AM IST

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல் நடத்தி, மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அன்புமணி, மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீன்வர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகள் பறிமுதல் செய்யும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.  இது கடுமையாக கண்டிக்கத்தக்கது! தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிப்பது,

Tap to resize

Latest Videos

ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.. 4ஆக பிரிந்துள்ள அதிமுக கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும்.. கோவை செல்வராஜ்..!

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

 கல்வீசித் தாக்குதல் நடத்தி மீனவர்களை  விரட்டியடிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன! சிங்களக் கடற்படையினரின் அட்டகாசங்களுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட சிங்களப் படையினர் அவர்களின் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் ஆகும்! வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து  தீர்வு காண வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக முன்னாள் எம்பிக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்

click me!