சினிமா படப்பிடிப்புகளை தடை இன்றி நடத்த அமைச்சர் வெள்ளைக்கோவில் சாமிநாதனிடம் திரைத்துறையினர் கோரிக்கை..

By Ezhilarasan BabuFirst Published May 12, 2021, 11:49 AM IST
Highlights

சினிமா படப்பிடிப்புகள் தடை இன்றி நடத்தவும், கூடுதல் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பாக திரைத்துறையினர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளைக்கோவில் சாமிநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

சினிமா படப்பிடிப்புகள் தடை இன்றி நடத்தவும், கூடுதல் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பாக திரைத்துறையினர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளைக்கோவில் சாமிநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு பதவி ஏற்றவுடன் வாழ்த்து தெரிவிப்பதற்காக திரைப்பட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் போது, பொது முடக்க காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது குறித்து கோரிக்கை முதல்வரிடத்தில் விடப்பட்டதாக தயாரிப்பாளர் ஆர்.கே செல்வமணி தெரிவித்தார்.மேலும் முதல்வர் கோரிக்கைக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறினர். 

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தென் இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளைக்கோவில் சாமிநாதனுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சரவுடன் ஆலோசனை நடத்திவர்கள் விபரம்: திரு. R.K.செல்வமணி, தலைவர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம். திரு. சுவாமிநாதன், பொருளாளர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்.திரு. தீனா, துணைத்தலைவர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம். திரு. ஸ்ரீதர், 

துணைத்தலைவர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம். திரு. சபரிகிரீசன், இணைச் செயலாளர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம். திரு. உமாசங்கர் பாபு, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம். திரு. முரளி, தலைவர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.திரு. சுஜாதா விஜயகுமார், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கம். திரு.பாலேஸ்வர், தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கம். சின்னத்திரை மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு கூடுதல் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பாக திரைத்துறையினர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 

click me!