அது பங்காளிச்சண்டை... என்கிட்ட கேட்காதீங்க... பொன்னார் பொளேர்!

Published : Oct 06, 2018, 11:16 AM ISTUpdated : Oct 06, 2018, 11:19 AM IST
அது பங்காளிச்சண்டை... என்கிட்ட கேட்காதீங்க... பொன்னார் பொளேர்!

சுருக்கம்

அதிமுகவின் மற்றொரு பிரிவுதான் அமமுக என்றும், இவ்விரு கட்சிகளும் பங்காளிச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்றும் அதில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மற்றொரு பிரிவுதான் அமமுக என்றும், இவ்விரு கட்சிகளும் பங்காளிச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்றும் அதில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், திகார் சிறையில் வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்தித்தார். கடந்த ஆண்டு ஓபிஎஸ் என்னை சந்தித்தது எனது நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். இந்த சந்திப்பின்போது தர்மயுத்தம் என்று கூறி நான் நடந்து கொண்டவிதம் தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டார் என்று கூறியிருந்தார்.

டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனால் எந்த காலத்திலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றும், முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறியிருந்தார். டிடிவி தினகரன், தரக்குறைவான அரசியல் செய்வார் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், பொய்க்கு மேல் பொய் சொல்லி வருகிறார் தினகரன் மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். அரசியல் நாகரீகம் தெரியாத அநாகரீகமானவர் என்றும் ஓ.பி.எஸ்., தினகரனை விமர்சித்திருந்தார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!